தாமரையை பாஜக-வுக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா?

தேசிய மலரான தாமரையை பாஜக-வுக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா? என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்துள்ளது.  

தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இது விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எனவும், சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை நிரூபிக்க விட்டால் கடுமையான அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com