ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை...

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை...

இந்தியாவில் கோவிஷீல்டு. கோவேக்சின் ஆகிய இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்காவதாக மாடர்னா தடுப்பூசிக்கும் இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 இந்நிலையில், தற்போது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்டநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.அப்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை தேவையில்லை என்று மத்திய அரசு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.