திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இணைந்த பாஜக தேசிய துணை தலைவர்...

பாஜக தேசிய தலைவராக உள்ள முகுல் ராய் மீண்டும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் கட்சியில் இணைந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இணைந்த பாஜக தேசிய துணை தலைவர்...

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவானதில் இருந்து அதில் இருந்த மூத்த தலைவர் முகுல் ராய், கடந்த 2017ல், பாரதிய ஜனத கட்சியில் இணைந்தார். இதனையடுத்து அவருக்கு பாஜகவின் தேசிய துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பலரும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து வரும் சூழலில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றதை மம்தா 3வது முறையாக முதல்வரானார். 

இந்த தேர்தலில் முகுல் ராய், பாஜக சார்பில் உத்தர கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதற்கிடையே, மம்தா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பலரும் மீண்டும் அக்கட்சிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. 

இதில், முகுல் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவதாக வெளியான தகவல் முக்கியமாக பார்க்கப்பட்டது.இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு  வந்த முகுல் ராய் அங்கு மம்தாவை சந்தித்து பேசி தன்னை கட்சியில் இணைத்து கொண்டார்.

திரிணமுல் காங்.கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக தேசிய துணை தலைவராக பொறுப்பேற்றவர், மீண்டும் திரிணமுல் கட்சிக்கே சேரயிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.