இந்தியாவில் 60ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 60ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, நாட்டில் புதிதாக 58 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் ஆயிரத்து 576 பேர் மரணம் அடைந்ததன் மூலம், இதுவரை வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 87 ஆயிரத்து 619 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் இதுவரை கொரோனா வைரசில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 29 ஆயிரத்து 243 ஆக சரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை, நாடு முழுவதும் இதுவரை 27 கோடியே 66 லட்சத்து 93 ஆயிரத்து 572 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.