சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கம்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம். சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த சங்கத்தில் 17 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சங்கத்தின் தேர்தல் கடைசியாக கடந்த ஆண்டு  2016 இல் நடைபெற்றநிலையில்  ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதித்திருந்தது. மேலும் ஐந்து ஆண்டுகளில் 200 வழக்குகளில் ஆஜரானவர்கள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் போன்ற விதிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் வகுத்தது.

மேலும் பிடிக்க |சட்டசபை கூட்டம்.... இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்பனரா

இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்னர், இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.

அதன்படி, இன்று நடைபெற உள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு ஜி மோகனகிருஷ்ணன், ஆர்.சி. பால் கனகராஜ், வேல்முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு முரளி, அறிவழகன், கோபால் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
செயலாளர் பதவிக்கு கிருஷ்ணகுமார், காமராஜ், மோகன்தாஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு வி.ஆனந்த் ஜி.ராஜேஷ், தாரா உள்ளிட்டோர் போட்டியிடுகிறார். இதேபோல் நூலகர், செயற்குழு உறுப்பினர், இளைய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் பிடிக்க |நாளை 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்...பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

கடந்த ஒரு மாதமாக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  வழக்கமாக நடைபெறும் தேர்தல் போல் அல்லாமல் இந்த முறை பல்வேறு கட்டுப்பாடுகளும்  விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துண்டு சீட்டுகள் விநியோகிக்காமல், அன்பளிப்புகள் வழங்காமல், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த முறை தேர்தல் அமைதியாகநடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது .

சுவாதிகா ரெங்கராஜன்.