பாஜக ஆட்சியையும் யாராவது உடைக்கலாம் - மம்தா பானர்ஜி

மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க முயற்சிப்பதன் மூலம் பாஜக நமது ஜனநாயகத்தை புல்டோசரை கொண்டு இடித்திருப்பதாக மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

பாஜக ஆட்சியையும் யாராவது உடைக்கலாம் - மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார் சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே. அவர்கள் அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,

உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும் என்றும் இன்று பாஜக அதிகாரத்தில் இருப்பதால் பணபலம், மாபியா பலத்தைப் பயன்படுத்துவதாகவும் சாடினார். ஆனால் ஒருநாள் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும் என குறிப்பிட்ட அவர் பாஜகவையும் யாராவது உடைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.