நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - தேசிய தேர்வு முகமை

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ம் தேதி நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாளை முதல் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - தேசிய தேர்வு முகமை

நீட் நுழைவு தேர்வானது, நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் உள்ள மையங்களில் நடைப்பெற உள்ளது. மேலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைப்பெற உள்ளது. இந்த தேர்வுகளை ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் எழுத முடியும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, 200 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றில் 180 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த முறை, தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்தி, தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. தேர்வானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடியும். அதாவது 20 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாணவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.