போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு

தொடர் போராட்டம் குறித்து வேளாண் சங்கங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  அறிவிப்பு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் காசிப்பூர் போராட்ட தளத்திற்கு டிராக்டர்களில் வந்துள்ளனர்.

எனவே போராட்டம் அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அரசுடன் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், இதற்கு ஒருவேளை அரசு உடன்படவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ராகேஷ் தீக்காயா தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுடன் அரசு பத்திலிருந்து பதினோரு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ள அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதும் அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக தான் உள்ளது என்று கூறிய அவர், விவசாயிகளிடம் இருந்து நியாயமான கோரிக்கைகள் வந்தால் நிச்சயமாக கலந்து ஆலோசிப்போம் என்று தெரிவித்தார்.