ஆன்லைன் விளையாட்டை கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம் - மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் சிறுவர்கள் ஆன்லைனில் கேம் விளையாடுவதை கட்டுப்படுத்த புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சமீபத்தில் ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி கிடந்த 11 வயது சிறுவன் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறுவர்களின் நலன் கருதி ஆன்லைனில் கேம் விளையாடுவதை கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் விளையாட்டால் பல சிறுவர்கள் உயிரிழப்பதாகவும், இது பெற்றோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.