புதுச்சேரியில் புகுந்த ஒமைக்ரான்.....2 பேருக்கு தொற்று உறுதி....!

புதுச்சேரியில் 2 நபர்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை செய்த பின்னர் தெரிவிக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் புகுந்த ஒமைக்ரான்.....2 பேருக்கு தொற்று உறுதி....!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் 80 வயது முதியவருக்கும், 20 வயது இளம் பெண்ணுக்கு ஓமைக்ரான் வகை தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு செய்தியாளர்களிடம் பேசும்போது,

புதுச்சேரியில் வெளிநாடு செல்லாத இரு நபர்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாவும், தொற்று உறுதி செய்யப்படவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருவதாவும் தெரிவித்தார்.

மேலும் 90 நபர்களின் பரிசோதனை அனுப்பப்பட்டுள்ள நிலையில் 2 நபர்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஓமைக்ரான் தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியில் 600 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், போதிய ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளது என்றார். மேலும் 2 நபர்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை செய்த பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com