இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்...2 பேருக்கு தொற்று உறுதி...பொதுமக்களே உஷார்...!

தென்னாப்ரிக்காவில் இருந்து பெங்களூரூவுக்கு விமானத்தில் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்...2 பேருக்கு தொற்று உறுதி...பொதுமக்களே உஷார்...!

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்  முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில்,தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், ஒமிக்ரான் பரவல் குறித்து அச்சம் அடையத் தேவையில்லை. அதேவேளையில் விழிப்புடன் இருப்பது அவசியம். ஒமிக்ரான் தொற்று டெல்டா வகை கொரோனாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. தற்போதைய சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை மீற வேண்டாம்,” என தெரிவித்துள்ளார்.