டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடக்கம்....விமான போக்குவரத்துறை அறிவிப்பு...!

டிசம்பர் 15- ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடக்கம்....விமான போக்குவரத்துறை அறிவிப்பு...!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி  முதல் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் 'ஏர் பபுள்' ஏற்பாட்டின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டும்  விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டிசம்பர் 15- ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 3 வகையாக வெளிநாடுகள் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.