ஏழைகளின் குரலாக விளங்கியவர் சாந்தி தேவி... பிரதமர் மோடி இரங்கல்

சமூக சேவகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாந்தி தேவி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஏழைகளின் குரலாக விளங்கியவர் சாந்தி தேவி... பிரதமர் மோடி இரங்கல்

சமூக சேவகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாந்தி தேவி வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 88-வது வயதில் காலமாகியுள்ளார். ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தின் குனுபூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.  

அவருக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அது மட்டுமின்றி சாந்தி தேவிக்கு ஜமுனாலால் பசாஸ் விருது மற்றும் ரதநாத் ரத் அமைதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 

Shanti Devi from South Odisha got the Padma Shri Award from President

அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் குரலாக விளங்கியர் சாந்தி தேவி என புகழாரம் சூட்டியுள்ளார்.

கவலைகள் அற்ற ஆரோக்கியமான மற்றும் உன்னத சமுதாயத்தை உருவாக்க அவர் தன்னலமின்றி உழைத்தவர் எனவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.