11 பெண்களை ஏமாற்றி ரூ.3 கோடி வசூல் - காதல் மன்னனை கைது செய்த போலீஸ்

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி பதினொரு பெண்களிடம் 3 கோடி ரூபாய் வசூல் செய்த காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்.

11 பெண்களை ஏமாற்றி  ரூ.3 கோடி வசூல் - காதல் மன்னனை கைது செய்த போலீஸ்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செட்டிகாலபூடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த சீனிவாஸ் பணம் சம்பாதிப்பதற்காக குறுக்கு வழியை தேடினார். அப்போது மேட்ரிமோனியல் சைட்ஸ், மற்றும் டேட்டிங் சைட்ஸ் ஆகியவற்றில் தன் பெயர், விவரங்களை பதிவு செய்து அதில் இருக்கும் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் இளம் பெண்களை தேடிப்பிடித்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

பின்னர் அவர்களுடன் நண்பர் போல பழகிய சீனிவாஸ் பின்னர் காதல்வலையை வீசுவாராம். வலையில் விழுந்த பெண்களிடன் பணத்தை வசூல் செய்வதை குறிக்கோளாய் கொண்டுள்ளார் சீனிவாஸ். இவ்வாறு 11 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய சீனிவாஸ் தொழில் செய்வதற்கு பணம் தேவை. கொரோனா காரணமாக வியாபாரம் நஷ்டம் அடைந்து விட்டது என்பது போன்ற போலி காரணங்களை கூறி 11 பெண்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் பணம் வசூல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்க ராயப்பேட்டை, மதனப்பள்ளி ஆகிய காவல் நிலையங்களில் பல பெண்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சீனிவாஸ் மீது ஆந்திராவில் உள்ள மேலும் பல காவல்நிலையங்கள் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.