ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த 3-ஆம் தேதி ஆர்யன் கான் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்,  கைது செய்யப்பட்டுள்ள 8 பேரையும் அக்டோபர் 21 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே ஆர்யன் கான் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணையை  வரும் அக்டோபர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.