
கோவாவின் முன்னாள் முதலமைச்சர் பிரதாப் சிங் ரானேவிற்கு வாழ்நாள் அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சராகவும், சபாநாயகராகவும் இருந்தவர் பிரதாப் சிங் ரானே. இவர் 50 ஆண்டு காலமாக கோவா சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
தற்போது காங்கிரஸ் எம்.எல்ஏ ஆக தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக, அம்மாநில அரசு அவருக்கு நிரந்தர அமைச்சரவை உறுப்பினர் அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ளது. இதனை கோவா முதல்வர் பிரமோத் சிங் டுவிட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளார்.