ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 29ஆம் தேதி இத்தாலி பயணம்

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 29ஆம் தேதி இத்தாலி இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 29ஆம் தேதி இத்தாலி பயணம்

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அக்டோபர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும் 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாவும்,

அதன்பிறகு பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக கிளாஸ்கோ செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக  மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.