குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!சர்வதேச பிரச்சனைகளில் இணைந்து செயல்பட உறுதி !

சர்வதேச பிரச்சனைகளில் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவது என இந்திய - அமெரிக்க இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!சர்வதேச பிரச்சனைகளில் இணைந்து செயல்பட உறுதி !

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயன உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் மட்டுமின்றி  சர்வதேச அளவிலாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், அச்சுறுத்தல்களை சீர் செய்வது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 

இவை தவிர உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் குறித்தும், இந்திய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் சர்வதேச பிரச்சனைகளில் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவது என இந்திய - அமெரிக்க இடையே உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.