இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு...!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்கிறார்.  

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. 

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் ஆகியவற்றை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

புதிதாக தயாரித்த முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானத்தை இந்நிறுவனம் அண்மையில் விமானப்படையில் ஒப்படைத்தது. இந்நிறுவனத்திடம் எஸ்.யூ., 30 எம்.கே. ஐ.,ரக போர் விமானங்களை வாங்கிட மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய, பிரதமர் மோடி இன்று பெங்களூருக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com