மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி.!!

மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி.!!

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது வாகனம் ஏறியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ்  உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு டெங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆசிஷ் மிஸ்ராவின்  ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.