விரைவில் 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக புதுச்சேரி மாறும்...ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி மாநிலம் விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விரைவில் 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக புதுச்சேரி மாறும்...ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு கிராமப்பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டும் வருகின்றது.

இந்நிலையில் மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் தற்போது 80 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்றும் குறிப்பாக 10,82,250 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாற அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.