ஜம்மு-காஷ்மீர் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...

பாகிஸ்தான் நாட்டுடனான கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜூலை 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.

22ஆவது கார்கில் வீரர்கள் நினைவு தினத்தையொட்டி ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்த உள்ளார். மேலும் லடாக்கில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.