புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய ரங்கசாமி...

புதுச்சேரியில் 40ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய ரங்கசாமி...

புதுவை மாநிலத்தில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு, பாஜக அமைச்சர் மாற்றம், என்.ஆர்.காங்கிஸ் அமைச்சர்கள் தேர்வில் குழப்பம் என இழுபறி நீண்டுகொண்டே இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா வருகிற 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாஜக தரப்பில் நமச்சிவாயம், சாய்சரவணக் குமார் ஆகியோர் அமைச்சர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.என்.ஆர்.காங்கிரஸில் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா உள்ளிட்டோரின் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் தான் புதுச்சேரியில் கடந்த 40வருடங்களாக பெண் ஒருவர் அமைச்சராக இருந்தது இல்லை. கடந்த 1980-ம் ஆண்டு காங்கிரஸ், திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார்.இதன் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் என்பதும் இவர் 2ஆவது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.