குடியரசு தின விழா வெகு தூரத்தில் இல்லை... மத்திய அரசுக்கு ராகேஷ் திகைத் எச்சரிக்கை...

குறைந்தபட்ச ஆதார விலைக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.

குடியரசு தின விழா வெகு தூரத்தில் இல்லை... மத்திய அரசுக்கு ராகேஷ் திகைத் எச்சரிக்கை...

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குடியரசு தின விழா அன்று டிராக்டர் பேரணி நடத்துவோம் எனவும், மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நடைபெறும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 கோரிக்கைகள் குறித்து, தங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகைத், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குடியரசு தின விழா வெகுதூரத்தில் இல்லை என்றும், டெல்லியில் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி 26-ம் தேதி செங்கோட்டை நோக்கி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.