
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மடுகரை சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.ஜெயப்பிரியா என்பவர் கிளை மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக சதுர்த்தி விடுமுறையில் இருப்பதால், அவர் பார்த்த பொறுப்பை காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த ஷியாமளா என்பவர் பொறுப்பை கவனித்து வந்துள்ளார்.
பணியில் இருந்த போது வசூலான ரூபாய் 10 லட்சத்து 80 ஆயிரத்தை இரும்பு அலமாறியில் வைத்துவிட்டு வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார் ஷியாமாளா. பின்னர் அதிகாலை வந்து பார்த்தபோது அலுவலகத்தின் கதவுகள் மற்றும் இரும்பு அலமாரி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக ஷியாமளா ,ஜெயப்பிரபாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா ஆய்வு செய்யப்பட்டது. அதில் ரெக்கார்டு பதிவாகும் சிசிடிவி ட்ரைவையும், பணத்தையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றிப்பது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து ஜெயப்பிரபா கரிக்கலாம்பாக்கம் புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்..