பெண்ணிடம் ரூ. 13.65 லட்சம் மோசடி .... நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர் கைது...

புதுச்சேரியை சேர்ந்த பெண்ணிடம் ரூ. 13.65 லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணிடம் ரூ. 13.65 லட்சம் மோசடி ....  நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர் கைது...

புதுச்சேரி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன், இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி, இவருக்கு முகநூல் முலமாக வெளி நாட்டை சேர்ந்த   எரிக்வால்கர் என்பவர் அறிமுகமாகி  தன்னை டாக்டர் என கூறி ஜெயந்தியுடன் பேசி வந்துள்ளர். 

அப்போது ஜெயந்தியின் மகள் பிறந்த நாளை முன்னிட்டு எரிக் வால்கர் தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி, டில்லி விமான நிலையத்திலிருந்து பேசுவதாக ஜெயந்திக்கு போஃன் வந்துள்ளது.

அதில் பேசிய பெண் ஒருவர் தான் விமான நிலைய அதிகாரி என்றும் இங்கிலாந்தில் இருந்து ஜெயந்திக்கு பார்சல் வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால் அதற்கு அபராதம் செலுத்தினால் பொருளை விடுவிப்பதாக கூறி ஒரு வங்கி என்னை கொடுத்துள்ளார்,

அந்த பெண் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ஜெயந்தி ரூ.13 லட்சத்தி 65 ஆயிரம் பணத்தை 4 தவணையாக செலுத்தி உள்ளார்,  பணம் செலுத்தியும் பரிசு பொருள் ஏதும்  விடுவிக்கப்படாததை அறிந்த ஜெயந்தி தாம்  ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்,

அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ஜெயந்தியிடம் மோசடி செய்த கும்பல் டெல்லியில் இருந்து பணத்தை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து டெல்லி சென்ற போலீசார், அங்கிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த இஷிகோ பேட்ரிக், ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட இருவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.