உலகம் உள்ளங்கையில் என்பதுபோல... தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை!! சாதனையின் உச்சத்தில் நெசவாளர்

தீப்பெட்டிக்குள் அடங்கும் புடவையை நெய்து சாதனை...
உலகம் உள்ளங்கையில் என்பதுபோல... தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை!! சாதனையின் உச்சத்தில் நெசவாளர்
Published on
Updated on
1 min read

தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை நெய்து தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்லா விஜய். கைத்தறி நெசவாளரான இவர்  தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை நெய்துள்ளார். 

பொதுவாக உலகம் உள்ளங்கையில்  அடங்கும் என்பார்கள். ஆனால் இவரோ ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கும் புடவையை நெய்து சாதனை படைத்துள்ளார். 

இந்த  புதுவித சேலையை அவர் தெலுங்கானா மந்திரிகள் கே.டி. ராமா ராவ், சபிதா இந்திராரெட்டி, ஸ்ரீனிவாஸ் கவுடா, எர்ரபெல்லி தயாகர் ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று காட்சிபடுத்தினார். மேலும், இந்த சேலையை நல்லா விஜய் மந்திரி சபிதா ரெட்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெலுங்கானா மந்திரி கே.டி.ராமா ராவ் பகிர்ந்துள்ளார். 

இது குறித்து நல்லா விஜயிடம் கேட்ட போது தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் இந்த சேலையை கைகளால் நெய்வதற்கு 6 நாட்கள் ஆனதாகவும், இயந்திரத்தால் நெய்யும் போது 2 நாட்களில் நெய்துவிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com