ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன்....

சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன்....

மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

இதற்கிடையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைதொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்ககோரி மும்பை  உயர் நீதிமன்றத்தின் மூனாவது முறையாக ஆர்யன் கான் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு குறித்து இன்று  உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது, இதற்கிடையில் ஆர்யன் கான் நாளை சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.