சோதனைக்காக விண்ணில் செலுத்தப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனையின் முக்கியத்துவங்கள் குறித்து பார்க்கலாம்...
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் பயணித்து வங்கக் கடலில் இறங்கியுள்ளது.
ககன்யான் சோதனையின் முக்கியத்துவங்கள்:
ககன்யான் சோதனையில் முக்கியமாக CES (crew excape system ) சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளது. அதாவது, மனிதர்கள் விண்ணுக்கு பயணிக்க உள்ள கலன் (crew module) TV -D1 ஐ விண்வெளிக்கு அனுப்பும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதிலிருந்து விண்வெளி வீரர்களை எவ்வாறு உயிருடன் மீட்பது என்கிற சோதனை செய்யப்பட உள்ளது.
அதற்காக மனிதர்கள் பயணிக்க உள்ள TV -D1 கலனை இஸ்ரோவின் தயாரிப்பான விகாஸ் என்ஜின் பொருந்திய ராக்கெட்டில் பொருத்தி பூமியிலிருந்து 17 கிலோமீட்டர் உயரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பறக்க வைக்க உள்ளனர்.
அதன் பின்னர் செயற்கையாக ஆபத்து ஏற்பட்டது போல TV -D1 கலன் ராக்கெட்டில் இருந்து எஸ்கேப் மோட்டார் மூலம் பிரிக்கப்படும். வேகமாக பூமியை நோக்கி விழும் TV -D1 கலன் தன்னுள்ளாக பாராசூட்டுகளை விரித்து மெதுவாக தரையிறங்க தொடங்கி சில நிமிடங்களில் கடலில் பத்திரமாக தரையிறக்கப்படும். அப்படி தரையிறக்கப்பட்ட அந்த கலனை கடற்படை உதவியுடன் மீட்டு அதன் உள்ளாக வைக்கப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு TV -D1 கலன் ராக்கெட் விபத்து நடக்கும்போது எந்த மாதிரியான பாதிப்பிற்கு அவசர காலத்தில் CES சிஸ்டம் சரியாக செயல்படுகிறதா என்பது உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டு மனிதர்கள் பயணிக்கும் கலனை மேலும் ஏதேனும் மேம்படுத்த வேண்டி இருந்தால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.