வருகிற டிசம்பர் 12-ம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து சோனியாகாந்தி தலைமையில் மெகா பேரணி...!

டெல்லியில் வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து, சோனியா காந்தி தலைமையில் மெகா பேரணி நடைபெற உள்ளது.

வருகிற டிசம்பர் 12-ம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து சோனியாகாந்தி தலைமையில் மெகா பேரணி...!

மெகா பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தாலும் இதுவரை டெல்லி அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை என தகவல் தெரிவிக்கிறது.  இதனால் மாற்று ஏற்பாடாக துவாரகா அல்லது ரோகிணியில் மெகா பேரணியை நடத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 12-ம் தேதி நடைபெறும் மெகா பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர். மேலும் இந்த மெகா பேரணியில் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.