பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை.. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் தீவிரம்!!

இலங்கையின் கொழும்பு கொட்டாவ வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதிகளை  மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை.. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் தீவிரம்!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டே போகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. இந்நிலையில்,  எரிபொருளின்றி தமது அன்றாட வேலைகளை முன்னெடுக்க முடியாத பலர், எரிபொருளுக்காக வரிசைகளில் காத்து இருக்கின்றனர்.

பல நகரங்களில் சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.