
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தால், பாரத ஸ்டேட் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் வாங்கியவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பண மோசடி குறித்து ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிப்பதில், பாரத ஸ்டேட் வங்கி கால தாமதம் காட்டியதாக தெரிகிறது.
இதனையடுத்து, ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க தவறியதாக கூறி, பாரத ஸ்டேட் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.