பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்றார்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமாருக்கு வெண்கலம் கிடைத்தது.

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்றார்

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் 8-வது நாளான இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில்  இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

இதில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு நுலிலையில் தங்கபதக்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றார். கடந்த பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதல் பிரிவில்   அமெரிக்க வீரர் கிரீவ் சாம் தங்கம் வென்றார்.