அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து...வீடுகள் பற்றி எரியும் பரபர காட்சிகள்

பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து...வீடுகள் பற்றி எரியும் பரபர காட்சிகள்
Published on
Updated on
1 min read

பெங்களூர் நகரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சுமார் 3 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அடுத்து அருகில் இருந்த வீடுகளிலும் தீ பரவ ஆரம்பித்தது.

அடுத்தடுத்த வீடுகளில் தீ பற்றிய நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைகு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புவீரர்கள், வீடுகளில் பற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயமோ, உயிரிழப்போ பதிவாகவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com