அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் - அமித்ஷா பதிவு!

அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் - அமித்ஷா பதிவு!

அக்னிபாத்’ திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு செயல்முறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இது இளைஞர்களுக்கு பெரும் பயனுடையதாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ராணுவத்தில் சேருவதற்காக காத்திருக்கும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் அக்னிபாத்’ திட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வயது வரம்பை உயர்த்தியதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் அக்னிபத் திட்டத்தின் மூலம் அவர்கள் நாட்டிற்கு சேவையாற்றுவதுடன், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மீதான அக்கறையின் விளைவாகவே வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாட்டுக்கு சேவையாற்ற துடிக்கும் இளைஞர்கள் மன கொதிப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அவர்களின் கோரிக்கைக்கு செவி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.