ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு...தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு...தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் வழியே, இந்தியா இன்று தலைமை தாங்கி நடத்த உள்ளது.

இந்தியா முதன்முறையாக தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த பல தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்த இருக்கிறார்.

இதையும் படிக்க : தீவிரமடைந்த மேகதாது விவகாரம்...டெல்லி பறக்கும் துரைமுருகன்...!

இதேபோன்று, அமைப்பின் ஓர் உறுப்பினராக விடுத்த ஈரானின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டையும் சேர்த்து கொண்டு, அமைப்பு விரிவாக்கம் செய்யப்பட கூடும் என கூறப்படுகிறது. இதுதவிர, பெலாரஸ் நாட்டையும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் தலைவர்கள் சேர்க்க கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கை ஒன்றில், பஹ்ரைன், குவைத், மியான்மார், மாலத்தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் புதிய நட்பு நாடுகளாக ஒத்துழைப்புக்கான முயற்சிகளில் இணைய உள்ளன என தெரிவித்து உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி அதுபற்றி தலைவர்கள் விவாதத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.