உலக தரம் வாய்ந்த ரயில் நிலையம் - வருகிற 15ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

போபாலில் கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த முதல் ரயில் நிலையத்தை வரும் 15 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் நாட்டின் முதல் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையங்களில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பிட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தில் ஏசியுடன் கூடிய சுமார் 700 முதல் ஆயிரம் பயணிகள் காத்திருக்கக்கூடுடிய வகையில் காத்திருப்பு அறை, ரயில்களின் இயக்கம் குறித்த தகவலுக்காக, ரயில் நிலையம் முழுவதும் பல்வேறு மொழிகளுடன் கூடிய காட்சி பலகைகள், 160 கண்காணிப்பு கேமராக்கள், படுக்கை வசதி, உணவகங்கள், லிப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை பிரதமர் மோடி வரும் 15 ஆம் தேதி நாட்டுக்கு அர்பணிக்க உள்ளார்.