ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிக் கொலை செய்த கும்பல்- பதறவைக்கும் சிசிடிவி காட்சி...

பெங்களூருவில் 5 பேர் கொண்ட கும்பல், ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிக் கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிக் கொலை செய்த கும்பல்-  பதறவைக்கும் சிசிடிவி காட்சி...

பெங்களூரு அருகேயுள்ள மார்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான குல்லா வெங்கடேஷ் என்பவர், கடந்த சனிக்கிழமை தனது நண்பர்களுடன் சேர்ந்து, அருகே உள்ள டீக்கடையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. தொழில் விவகாரம் தொடர்பாக, வெங்கடேஷின் எதிரிகள் கூலிப்படையை வைத்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெங்கடேஷ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.