தீக்கிரையான 25-க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி பிரமுகர்களின் வீடுகள்!

ஆளுங்கட்சியின் 25-க்கும் மேற்பட்ட  அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மக்களால் நேற்றிரவு அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.

தீக்கிரையான  25-க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி பிரமுகர்களின் வீடுகள்!

இலங்கையில் அறவழிப் போராட்டக்காரர்கள் மீதும், அவர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மீதும் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  மக்களின் போராட்டங்கள் வெடித்தன.

மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடாக வீரகெட்டிய - மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது. ராஜபக்சக்களின் பெற்றோரின் கல்லறையும் அடித்து நொறுக்கப்பட்டது.

குருநாகல் மேயர், மொரட்டுவ மேயர் உள்ளிட்ட  25 இற்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. அவர்களுக்குச் சொந்தமான சில விடுதிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.