நாளை எதிர்கட்சிகள் கூட்டம் : மாநாட்டுத் திடலை ஆய்வு செய்த முதலமைச்சர் சித்தராமையா!

நாளை எதிர்கட்சிகள் கூட்டம் : மாநாட்டுத் திடலை ஆய்வு செய்த முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூருவில் நாளை நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், மாநாட்டுத் திடலை முதலமைச்சர் சித்தராமையா நேரில் ஆய்வு செய்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்கட்சிகள் கூட்டம் பீகாரின் பாட்னாவில் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், டி.எம்.சி, என்.சி.பி உள்ளிட்ட 15 கட்சிகள் பங்கேற்றன. தொடர்ந்து பெங்களூருவில் 17, 18 ஆகிய தேதிகளில் அடுத்த கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.

இதையும் படிக்க : சென்னை வியாசர்பாடியில் பரபரப்பு! தலைமை காவலரை மிரட்டிய ரவுடி கைது!!

நாடு எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு தீர்வுகாண அனைத்து எதிர்கட்சிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமெனவும் அவர் அறிவித்தார். தமிழ்நாட்டின் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு தேச மக்கள் கட்சி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நாளை இரவு உணவுடன் தொடங்கும் கூட்டம், நாளை மறுநாள் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாநாட்டுத் திடலை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜூவாலா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.