35 வருடங்கள் காத்திருந்து காதலியை கரம்பிடித்த முதியவர்....!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 35 வருடங்களுக்கு பிறகு 65 வயதுடைய முதியவர் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 வருடங்கள் காத்திருந்து காதலியை கரம்பிடித்த முதியவர்....!

மைசூர் நகரில் உள்ள ஹெப்பாலாபகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா. 65 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயம்மாவை காதலித்துள்ளார். ஆனால் அப்போது இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதன்பிறகும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுடைய காதல் கனவு, விடா முயற்சி விஸ்பரூப வெற்றி போல், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைக்கூடியுள்ளது, மீண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதனைதொடர்ந்து நேற்று இந்த இரண்டு தம்பதிகளும் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை பகுதியில் உள்ள கோவில் எதிரே இருந்த மண்டபத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.