நாளைய சட்டசபை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாளைய சட்டசபை கூட்டத்தொடரில், நீட் தேர்வுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நாளைய சட்டசபை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தூத்துக்குடி மாவட்டம் எல்லைநாயக்கன்பட்டியில் மெகா தடுப்பூசி முகாமை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல் கூட்டத்தொடர் நாளை முடிவடையும் நிலையில் இந்த தீர்மானம் முதலமைச்சர் கொண்டு வருவார் என்றார்.

மேலும் தமிழகத்தில் இன்று 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் அனைத்து கிராமங்கள், நகரங்கள் என மொத்தம் 40 ஆயிரம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர்,  இதன் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 4 கோடி என்ற நிலையை அடையும் என்றார்.