நெயில் ஆர்ட்னு...நகத்தை டீ வடிகட்டியாக மாற்றிய பெண்!!

வித்தியாசமாக யோசிக்கும் பொருட்டு நெயில் ஆர்ட் செய்து நகத்தை டீ வடிகட்டி போல் பெண் ஒருவர் பயன்படுத்தி வருகிறார்.
நெயில் ஆர்ட்னு...நகத்தை டீ வடிகட்டியாக மாற்றிய பெண்!!
Published on
Updated on
1 min read

பொதுவாக  வித்தியாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை வலைதளங்களில் வெளியிடுவது சாதாரணமான ஒன்றாகும்.இப்படி வெளியீடும் வீடியோக்களை நெட்டிசன்கள் வைரலாக்கி, பாராட்டி வருவதுண்டு.

இது போன்று தான் நெயில் ஆர்ட் செய்யும் சிலர் நகங்களில் ஓவியம் வரைவது முதல் புதுவித முயற்சியை கலைஞர்கள் செய்து வருகின்றனர். 

இவையெல்லாம் ஒருபுறமிருக்க பெண்மணி ஒருவர் இதுவரை யாரும் சிந்திக்காத வகையில் நெய்ல் ஆர்ட் ஒன்றை செய்துள்ளார்.அந்த நெயில் ஆர்ட் ஆனது, நகத்தின் முனையில் டீ வடிகட்டியை போன்று ஒரு வித்தியாச முயற்ச்சியை செய்துள்ளார்.

இதனை பார்ப்போர் அனைவருக்கும் ”என்ன இது புது வித சிந்தனையால இருக்கு” என சொல்லும் அளவிற்க்கு உள்ளது. இது ஒரு விசித்திரமான நெயில் ஆர்ட் தான் என, இதனை செய்து கொண்ட பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதனை செய்து கொள்ளும் போது அவர் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் சேர்ந்து பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் உருவாக்கப்பட்ட நெயில் ஆர்ட் டீ வடிகட்டி போன்று  தோற்றம் அளிப்பதால் அதில் அவர் டீ யையும் வடிகட்டுவது போல பதிவிட்டுள்ளார். இந்த நெயில் ஆர்ட் ஆனது தற்போது பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த பலரும் (அட்டகாசம், சிறப்பு, என்ன அறிவு, எனக்கும் இப்படி ஒன்னு வேனும்) எனவெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com