பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தல் கொடுத்த மத்திய அரசு...வெள்ளை மாளிகை கண்டனம்!

பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தல் கொடுத்த மத்திய அரசு...வெள்ளை மாளிகை கண்டனம்!

Published on

பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு தொடர்பாக கேள்வியெழுப்பிய அமெரிக்க பெண் பத்திரிகையாளர், அச்சுறுத்தல்களுக்கு உள்ளான நிகழ்வுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. 

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தபோது, சிறுபான்மையினர் இந்தியாவில் அச்சுறுத்தப்படுகின்றனரா? என வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் சபரினா சித்திக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஜனநாயகம் தங்களது டி.என்.ஏ-வில் உள்ளதாகக் கூறினார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு, கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளர் சபரினாவுக்கு ஆன்லைன் வழியாக மத்திய அரசின் சில அதிகாரிகள் மற்றும் இந்தியர்கள் வாயிலாக மிரட்டல்கள் வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளை மாளிகை, எந்த ஒரு சூழ்நிலையிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது, அதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com