ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தோல்வி - கிரேட்டா தன்பெர்க் குற்றச்சாட்டு

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தோல்வி அடைந்துள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தோல்வி - கிரேட்டா தன்பெர்க் குற்றச்சாட்டு
Published on
Updated on
1 min read

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தோல்வி அடைந்துள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியே பேரணியில் பங்கேற்று பேசிய அவர், விதிகளில் ஓட்டைகளை தீவிரமாக உருவாக்கி, அங்குள்ள தலைவர்கள் தங்கள் நாட்டு கருத்துக்களை தெரிவித்து வருவதாக விமர்சனம் செய்துள்ளார்.

மாசுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கிரேட்டா தன்பெர்க், உண்மையைக் கண்டு உலக தலைவர்கள் பயப்படுவதாகவும், எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் அவர்களால் தப்பிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

அவர்களிடம் பருவநிலை மாற்றம் குறித்து பேசி-பேசி நாம்தான் சோர்வாகி விட்டதாகவும், ஆகவே இனி அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, மாற்றத்துக்கான முன்னெடுப்பை நாமே எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com