கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு...!

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு...!

கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனர். தொடர்ந்து தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே செயல்பட்டு வந்தார்.

இதையும் படிக்க : ”சனாதனத்தை மீண்டும் திணிக்கும் முயற்சியில் பாஜக” - வன்னியரசு கருத்து!

இந்நிலையில் 5 முறை எம்எல்ஏவாக பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர் யு.டி.காதர் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாததை அடுத்து, ஒருமனதாக யு.டி.காதர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில வரலாற்றில் முதன்முறையாக ஒரு இஸ்லாமியர், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.