உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேனு கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது...

மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ்தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேனு கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது...

சுதந்திர தின நிகழ்வின் போது, உரையாற்றிய மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது அருகில் இருந்தவர்களிடம் இது எத்தனையாவது சுதந்திர தினம் என வினவியதாக சொல்லப்படுகிறது. இதனை அண்மையில் குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, உத்தவ் தாக்கரே தன்னிடம் இக்கேள்வியை கேட்டிறிருந்தால், அவரது கன்னத்தில் பளார் விட்டிருப்பேன் என தெரிவித்திருந்தார். 

இவரது இந்த காட்டமான பேச்சு தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இவருக்கு எதிராக யுவ சேனா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் காவல் நிலையத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இருப்பினும் தன்மீது எவ்வித தவறும் இல்லை எனவும், ஆகஸ்ட் 15 தினத்தை மறந்தது தவறில்லையா எனவும் அமைச்சர் தன்னிலை விளக்கத்தை அறிவித்து வருகிறார்.

இதனிடையே முதல்வரை தரக்குறைவாக பேசிய அமைச்சரை கண்டித்து, நாசிக்கில் உள்ள பாஜக அலுவலகம் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாஜக தொண்டர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் நாசிக் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

இந்தநிலையில்  நாராயண் ரானே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே  இந்த விவகாரத்தில் தன் மீது போடப்பட்டுள்ள அனைத்து எப்ஐஆர்களையும் ரத்து செய்ய கோரி, மத்திய அமைச்சர் நாராயண் ரானே மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.