காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.  

காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

காஷ்மீர் பல்கலையில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாந் கோவிந்த், அனைத்து வேறுபாடுகளையும் சரிசெய்யும் திறனையும், குடிமக்களின் சிறந்த திறனை வெளிப்படுத்தும் திறனையும் ஜனநாயகம் கொண்டுள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். இதனை காஷ்மீர் ஏற்கனவே உணர்ந்துள்ளது.காஷ்மீரின் அமைதியான வாழ்க்கை உடைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

காஷ்மீரின் ஒரு அங்கமாக வன்முறை இருந்ததில்லை. ஆனால், தற்போது தினமும் நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது என்றும் காஷ்மீர் கலாசாரத்திற்கு, வன்முறை விரோதமானது. இந்த வன்முறை, தற்காலிகமானது தான். உடலில் புகும் வைரசை அழிப்பது போல், வன்முறையை அழிக்க வேண்டும். மாநிலத்தில் இருந்து வன்முறையை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.

காஷ்மீர் இழந்த பெருமையை பெற புதிய துவக்கமும், முயற்சிகளும் துவங்கி உள்ளது.வேதகாலத்தில், சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை காஷ்மீர் ஒரு சேர வழங்கியதை அனைவரும் அறிய வேண்டும் என பேசிய குடியரசு தலைவர்,  தங்களின் வளமான பாரம்பரியங்களை இளம் தலைமுறையினர் கற்று கொள்ள வேண்டும். இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரையாக காஷ்மீர் வருகிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும் எனவும் காஷ்மீரின் கலாசார மற்றும் ஆன்மீக செல்வாக்கு இந்தியா முழுவதும் முத்திரை பதித்து உள்ளது என குடியரசு தலைவர் பேசினார்.