ஜி20 - உலகத் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி!

ஜி20 - உலகத் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி!

ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோருடன் இந்தியப் பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா தலைமைமையில் 18வது ஜி20 உச்சிமாநாடானது உலகத் தலைவர்கள் பங்கேற்புடன் டெல்லியில் கோலாகலமாகக் தொடங்கியது. இதில் 20 நாடுகளின் தலைவர்கள் - சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 14 தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, வங்கதேசப் பிரதமர் ஷீக் ஹசீனா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு தொடங்கிய நிலையில், மொராக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இதையடுத்து ஆப்பிரிக்காவை ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பினராக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி20 -ல் முதன் முறையாக பங்கேற்ற ஆப்பிரிக்க யூனியன் குழுத்தலைவர் அசாலி அசோமணியை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தின் முதல் அமர்வு நிறைவுபெற்ற நிலையில், இந்திய வம்சாவளியும் இங்கிலாந்து பிரதமருமான ரிஷிசுனக்கை ஆரத்தழுவி வரவேற்று பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருநாட்டு நல்லுறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவுடன் இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபைடன், தென்ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமாஃபோசா உள்ளிட்டோருடன் இந்தியப் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதையடுத்து பல்வேறு உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com