கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோவினஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது சொந்த ஊரில் இருந்து தினந்தோறும் சிந்தாமணி என்ற பகுதிக்கு அரசு பேருந்து மூலமாக வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பெண்னை பக்கத்து ஊரை சேர்ந்த பாபு என்பவர் தினந்தோறும் கேலி கிண்டல் செய்து வந்ததாகவும், கடந்த 4 ஆம் தேதி அன்று அந்த பெண் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று பாபுவை நடுரோட்டில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறபடுகிறது.’
அப்போது பாபு இவ்வாறே உன்னை கேலி செய்வேன் என கூறியதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் சாலையின் நடுவே வைத்து பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அன்று மாலையே தனது உறவினர்களை அழைத்து வந்த பாபு கோவினஹள்ளி பேருந்து நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தின் எதிரொலியாக இருதரப்பினரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டு பலத்த காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு கோலார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோலார் நகர்புற போலீசார் வழ்க்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.